LibreOffice 25.2 உதவி
Opens a dialog for editing the properties of a selected control.
பண்புகள் உரையாடலில் நீங்கள் தரவை உள்ளிட்டால், பலவரி உள்ளீடு சில இழுத்து-போடு காம்போ பெட்டிகளுக்குச் சாத்தியமாவதைக் கவனியுங்கள். இது SQL கூற்று உள்ளிடப்படக்கூடிய அனைத்து புலங்களையும், அதேப்போல உரைப்பெட்டிகளின் பண்புகளையோ விளக்கச்சீட்டுப் புலங்களையோ உட்படுத்துகிறது. நீங்கள் இந்த புலங்களைத் திறப்பதோடு திறந்த பட்டியலில் உரையை உள்ளிடவும் முடியும். பின்வரும் குறுக்குவழி விசைகள் செல்லுபடியாகும்:
| விசைகள் | விளைவு | 
|---|---|
| +கீழ் அம்பு: | சேர்க்கைப் பெட்டியைத் திறக்கிறது. | 
| +மேல் அம்பு: | சேர்க்கைப் பெட்டியை மூடுகிறது. | 
| Shift+உள்ளிடு | ஒரு புது வரியை நுழைக்கிறது. | 
| மேல் அம்பு | முந்தைய வரியில் இடஞ்சுட்டியை வைக்கிறது. | 
| மேல் அம்பு | அடுத்த வரியில் இடஞ்சுட்டியை வைக்கிறது. | 
| உள்ளிடு | உள்ளீட்டுப் புலத்தை முழுமையாக்குவதோடு அடுத்த புலத்தில் இடஞ்சுட்டியை வைக்கிறது. | 
பட்டியல் பெட்டிகள் அல்லது சேர்க்கைப் பெட்டிகள் போல, புல இடது முடிவிலுள்ள அம்பில் சுட்டெலி சொடுக்குடன் நீங்கள் பட்டியலைத் திறக்கவோ மூடவோ முடியும். இருப்பினும், இங்குள்ள உள்ளீட்டைத் திறந்த பட்டியலிலோ மேல் உரை புலத்திலோ உள்ளிட முடியும். ஒரு விதிவிலக்கு என்பது பட்டியல் பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கும் பண்புகள் ஆகும். எ.கா, பண்பு "பட்டியல் உள்ளிடுகள்", இங்கு கட்டுப்பாடு புலங்களுக்கான பட்டியல் பெட்டி மற்றும் சேர்க்கைப் பெட்டி ஐ அமைக்கலாம். இங்கு, புலம் திறந்திருந்தால் மட்டுமே நீங்கள் உள்ளீடுகளை தொகுக்க முடியும்.